டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கடந்தவாரம் பத்து தல, தசரா என ராவணனின் கதாபாத்திர அம்சம் கொண்ட படங்கள் வெளியான நிலையில் தற்போது நடிகர் ரவிதேஜா நடிப்பில் தெலுங்கில் ராவணாசுரா என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகியுள்ளது. சுதீர் வர்மா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அனு இம்மானுவேல், பரியா அப்துல்லா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட ஐந்து கதாநாயகிகள் நடித்துள்ளனர். நடிகர் ஜெயராம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் ஏப்-7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் கிரிமினல் லாயராக நடித்திருக்கிறார் நடித்திருக்கிறார் ரவிதேஜா. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் ஜெயராம் பேசுகின்ற “இவன் கிரிமினல் லாயர் அல்ல.. லா தெரிஞ்ச கிரிமினல்” என்கிற வசனத்துக்கு ஏற்ப ரவி தேஜாவின் ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் என இரண்டும் கலந்த அவரது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு தற்போது 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. காரணம் யு/ஏ சான்றிதழை தான் அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் படத்தில் அதிகம் வன்முறை காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் இடம்பெற்று இருப்பதால் இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரவிதேஜா படத்திற்கு குழந்தைகளும் ரசிகர்கள் என்பதால் இந்த படத்திற்கு குடும்பத்தினர் குழந்தைகளையும் அழைத்து வந்து படம் பார்ப்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாம்.