நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் |
காமெடி நடிகர் சூரி... இனி கதாநாயகன்! வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் சூரி தான் ஹீரோ. இவரிடம் பேசியதில் இருந்து...
வெண்ணிலா கபடி குழுவில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து விடுதலையில் நாயகனாக மாறியது பற்றி
கதையின் நாயகனாக உங்களிடம் பேசுவது பெரிய மகிழ்ச்சி. எப்போ வேணா, எந்த நேரம் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்ற நம்பிக்கை மட்டும் போதும்.. அதற்கு தகுதியானவராக நம்மை வளர்த்துக் கொண்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் அதற்கான பலன் கிடைக்கும் என்பதை நான் கற்றுக் கொண்டேன்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனிடம் இருந்து எப்படி உங்களுக்கு அழைப்பு வந்தது...
வடசென்னை படத்துக்கு முன்னாலேயே வெற்றிமாறன் என்னை கூப்பிட்டு பேசினார். அதுக்கு முன்பு எனக்கு வெற்றிமாறனிடம் பழக்கம் கிடையாது. காரைக்குடி பின்னணியில் ஒரு கதை சொன்னாரு, நாலு ஐந்து கேரக்டர் பத்தி இவங்க இவங்க நடிக்கிறாங்கன்னு சொன்னாரு. என்னடா எல்லா கேரக்டரும் சொல்லிட்டாரே நமக்கு என்ன வாய்ப்பு கொடுக்கப்போறாருன்னு யோசிச்சேன். படத்துல முக்கியமான லீட் ரோல், அதை நீங்க பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு. இதைக் கேட்டதும் படக்குனு எழுந்திருச்சு வானத்துல பறந்த மாதிரி ஒரு பீல். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் இப்படத்தில் நடிக்க வந்தது சூரிக்காகவா வெற்றி மாறனுக்காகவா...
வாத்தியார் கேரக்டருக்கு முதலில் நடிக்க இருந்தது பாரதிராஜா தான். அவரது உடல்நிலை கருதி நடிக்கவில்லை. விஜய் சேதுபதி அருமையாக செய்திருக்கிறார். அவர் படத்தில் வந்த பிறகு விடுதலை பார்ட் 1, பார்ட் 2 என்று படம் பெருசானது. ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள். அதனால் டேய் மாமா அப்படின்னு தான் சொல்லி ரெண்டு பேரும் பேசி பழகுவோம். எனக்கு ஒரு நண்பனோடு நடிச்சது ரொம்ப சந்தோஷம். என்னை இப்படி ஒரு முக்கிய ரோலில் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப் பட்டார் விஜய் சேதுபதி. அது விடுதலை மூலம் நடந்திருக்கு.
போலீஸ் ரோலில் நடிப்பதற்கு காமெடி நடிகரான நீங்கள் உங்களை மாற்றிக் கொண்டு உடலை மெருகேற்றிய மெனக்கடல் எப்படி இருந்தது..
நாலு கோடில ஆரம்பிச்ச படம் இப்ப எழுபது கோடி வரைக்கும் வந்துருச்சு. நம்மளுக்கு இவ்ளோ பெரிய கேரக்டர் பண்ணி பழக்கம் இல்ல; இயக்குனர், தயாரிப்பாளர் நம்பிக்கைக்கு 50% ஆவது நான் சரியா இருக்கணும்னு என்னை தயார் செய்ய ஆரம்பித்தேன். படத்தை ஒத்துக்கொண்ட பிறகு சாப்பாடு, தூங்குறது, உடற்பயிற்சி இப்படி எல்லா விஷயத்தையும் சரியாக பின் தொடர்ந்தேன். போலீஸ் உடை அணியும்போது அதற்கு நான் சரியானவனா இருக்கனும்னு மெனக்கெட்டேன்.
படத்துல உங்களுக்கு லவ் இருக்கு போலயே...
லவ் ன்னு சொன்ன உடனே லேசா கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு. ஆனா படத்தில் அற்புதமான லவ் இருக்கு. முகம் சுளிக்கிற மாதிரி ஒரு இடத்துல கூட காட்சி இருக்காது.
பொதுவா ஹீரோவா நடிக்க வந்தா மற்ற கேரக்டருக்கு நடிக்க கூப்பிட மாட்டாங்க; ஹீரோவா நடிக்க வந்த பிறகு எத்தனை படத்தை தவற விட்டீங்க....
நிறைய படங்களை தவற விட்டேன். எந்த படத்தையும் மிஸ் பண்ணாதீங்க; முடிஞ்ச வரைக்கும் போய் நடிங்க என்று தான் வெற்றி மாறன் சொன்னாரு. நான் தான் போகல.
சூரி இனி கதாநாயகனா மட்டும் தான் நடிப்பாரா; இல்ல நகைச்சுவை ரோலும் செய்வார்...
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். விடுதலை படம் நம்பிக்கையும் மன உறுதியும் கொடுத்து இருக்கு. எது கொடுத்தாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து இருக்கு
விடுதலை எதை பற்றிய படம்...
ஜெயமோகன் எழுதிய கதை. மக்களுக்கான கதை. மக்கள் போராட்டம் பற்றி பேசும், ஒரு சராசரி மனிதனின் போராட்டம் தான் விடுதலை.