ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தர்மம், தைரியம், தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்ரீ ராமரின் நல்லொழுக்கத்தையும் மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது.
ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ராம நவமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நன்மையின் தொடக்கத்தை குறிப்பிடும் இந்நன்னாளில் ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்தின் தெய்வீகம் ததும்பும் புதிய போஸ்டரை அப்பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஸ்ரீ ராமராக பிரபாஸ், சீதா தேவியாக கிருத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே ஆகியோர் தோன்றியிருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.