புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் ,வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதியானது. சுமார் 110 பவுன் வரை நகைகள் திருடி உள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்தது.
நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா தன் லாக்கரில் இருந்து 3.60 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதாக புகார் அளித்தநிலையில், வீட்டு பணிப்பெண்ணிடம் இருந்து 3 கோடி மதிப்பிலான 100 சவரன் நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், மற்ற நகைகள் குறித்து அப்பெண் மற்றும் கார் ஓட்டுனரிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
'லாக்கரில் இருந்து திருடு போன நகைகள் எவ்வளவு, ஏன் குறைத்து மதிப்பிட்டு புகார் அளித்தார்' என, ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினி 200 சவரன் நகைகள் கொள்ளை போனதாக மீண்டும் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். ஈஸ்வரியிம் இருந்து இன்னும் 50சவரன் நகைகள் கைப்பற்றபப்பட வேண்டும் என காவல் துறை சார்பில் கூறப்படுகிறது.