புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் கதையில் ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி அப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனபோதிலும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை லைகா நிறுவனம் வெளியிடவில்லை.
விரைவில் அஜித் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் அஜித்தின் தந்தை மரணம் அடைந்ததால் இப்படத்தின் அறிவிப்பை மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்கு லைகா நிறுவனம் தள்ளி வைத்திருக்கிறார்கள். அடுத்த மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள் என்பதால் அன்றிலிருந்து அவரது 62வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தை இந்த ஆண்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த லைகா நிறுவனம் தற்போது படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் அடுத்த ஆண்டில் அஜித் 62 வது படத்தை வெளியிடலாம் என்ற முடிவில் உள்ளனர்.