ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தபடியாக சென்னையில் நடைபெற உள்ளது. லியோ படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு அடிப்படையில் உருவாகிறதா? இல்லை தனி படமாகவே உருவாகிறதா? என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இப்படத்தின் பூஜையின் போது கைதி படத்தில் நடித்த மரியம் ஜார்ஜ் கலந்து கொண்டார். படக்குழு காஷ்மீர் சென்றபோது படங்களுடன் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீன் ஆக நடித்த வசந்தியும் இடம் பெற்றிருந்தார். இதனால் லியோ படமும் எல்சியு-வில் இடம்பெற்றுள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தில் அமர் என்ற வேடத்தில் நடித்திருந்த பஹத் பாசிலும் விரைவில் லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திலும் அவர் அமராகவே வருவதாகவும் கூறப்படுகிறது.