'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசை அமைத்தவர் எம். எம் .கீரவாணி. இவரது இசையில் உருவான நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் கீரவாணி அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர் ராம்கோபால் வர்மா தான் என்னுடைய முதல் ஆஸ்கர் விருது என்று கூறியிருந்தார். அதோடு ஒரு காலத்தில் நான் இசையமைத்த படங்களின் ஆடியோ கேசட்டுகளை சிலர் குப்பைத்தொட்டியில் வீசினார்கள். ஆனபோதும் என்னை நம்பி மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் ராம்கோபால் வர்மா தான். அதன்பிறகு நான் இசையமைத்த அவரது படங்கள் ஹிட் அடித்தன.
ராம்கோபால் வர்மாவே இந்த இசையமைப்பாளருடன் தொடர்ந்து பணிபுரிகிறார் என்றால் அவரிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நினைத்து மற்ற இயக்குனர்களும் எனக்கு வாய்ப்பளித்தார்கள். அதனால் ராம்கோபால் வர்மாதான் எனது முதல் ஆஸ்கர் விருது. இப்போது நான் வாங்கி இருப்பது இரண்டாவது ஆஸ்கர் விருது என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் கீரவாணி. ஆனால் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ராம் கோபால் வர்மா வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், பொதுவாக இறந்தவர்களை தான் இப்படி புகழ்வார்கள். நான் இந்த புகழ்ச்சியை பார்த்தவுடன் இறந்து விட்டதாக உணர்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.