‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
மலையாள திரையுலகில் உணர்வுபூர்வமான படங்களை எடுப்பதற்கு பெயர் பெற்ற இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள படம் ஆடுஜீவிதம். இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படம் வரும் அக்டோபர்-20ல் ரிலீஸாக இருக்கிறது என ஒரு தகவல் தற்போது மீடியாவில் கசிந்துள்ளது. இந்த ரிலீஸ் தேதி அறிவிப்பை இதுவும் ஒரு அறிவிப்பு என்பது போல அவ்வளவு சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது
காரணம் கிட்டத்தட்ட 2010ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இது. மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவரால் எழுதப்பட்டு அதிகம் விற்பனையான 'ஆடுஜீவிதம்' நாவலை அதேபெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் பிளஸ்சி. பல கனவுகளோடு சவுதி அரேபியாவுக்கு சென்று அங்கே அடிமையாய் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞனைப் பற்றிய கதை இது.
முதலில் இந்தப்படத்தில் பிரித்விராஜைத்தான் கதாநாயகனாக பேசினார்கள்.. பின்னர் மோகன்லால் நடிக்க இருக்கிறார் என்றார்கள்.. இன்னும் சில காலம் கழித்து விக்ரமுக்கும் இந்த கதை சொல்லபட்டது. கேரளாவுக்கு 'ஐ' பட புரமோஷனுக்காக வந்தபோது கூட, 'ஆடுஜீவிதம்' நாவலை படமாக எடுத்தால் அதில் தான் நடிப்பதாக கூறினார் விக்ரம். ஆனால் அங்கே சுற்றி இங்கே சுற்றி முதலில் யாரை வைத்து பேசப்பட்டதோ, அதே பிருத்விராஜுக்கே கடைசியில் இந்தப்படம் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் ஒருவழியாக கடந்த 2018லேயே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது . ஆனால் இந்த படத்திற்காக பெரும்பாலான காட்சிகளில் உடல் மெலிந்த தோற்றத்தில் பிரித்விராஜ் நடிக்க வேண்டி இருந்தது. இதற்காக பல படங்களை ஒதுக்கி வைத்து விட்டு, தனது உடல் எடையை குறைத்து இந்த படத்தில் நடித்தார் பிரித்திவிராஜ். இப்படி கேரளாவில் துவங்கி வாடி ரம், ஜோர்டன், சகாரா பாலைவனம் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகுந்த இடைவெளி விட்டு நடைபெற்றது.
கடந்த 2022 ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வருடம் இந்த படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருக்கிறாராம். இதனை தொடர்ந்து அக்டோபர் 20ல் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.