சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா | விக்ரம் படத்தை வெளியிடும் விஜய் பட தயாரிப்பாளர்! | தமிழ் படங்களுக்கு நோ சொன்ன இளம் நடிகை | புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' |
லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களையும் பாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். சில தினங்களுக்கு முன் லண்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெயஸ்ரீ சென்றிருந்தார்.
அங்கு ஓட்டலில் தங்கியிருந்த அவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மெல்ல குணமாகி வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.