காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்தப்படம் வரும் ஏப்., 14ல் ரிலீஸாகிறது. இதையடுத்து குஷி என்ற படத்தில் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் இதை ஷிவா நிர்வனா இயக்குகிறார். காதல் கதையில் தயாராகிறது. இந்த படம் ஆரம்பித்த சமயத்தில் தான் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா. இதற்காக சில மாதங்களாக அவர் சிகிச்சை மேற்கொண்டதால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா மீண்டும் இதன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்நிலையில் வரும் செப்., 1ல் படம் ரிலீஸாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு போஸ்டரையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.