'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் சில நாட்களுக்கு முன் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தயாரிப்பாளர் லலித் தெரிவித்திருந்தார். நேற்று தனது பகுதி படப்பிடிப்பு முடிவடைந்ததால் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பினார் விஜய். இந்நிலையில் நேற்று லியோ படத்திற்கான காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவு பெற்றதால் இன்று படக்குழுவினர்கள் அனைவரும் தனி விமானத்தில் சென்னை திரும்புகின்றனர். இதையடுத்து சென்னையில் நடக்க உள்ள படப்பிடிப்பில் விஜய், சஞ்சய் தத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.