'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். அதிரடி ஆக் ஷன் கதையில் உருவாகும் இதில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடிக்கிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
முன்னதாக இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது படப்பிடிப்பு ஏப்ரல் 15க்குள் முடிந்துவிடுமாம். அதன்பின் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை துவக்கி ஆகஸ்ட் மாதமே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் வருகிறது. அதற்கு நான்கு நாட்கள் முன்னதாக ஆக., 11ல் படம் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.