'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்தாண்டு துவக்கத்தில் ‛துணிவு' என்கிற படத்தின் மூலம் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளார் நடிகை மஞ்சு வாரியர். இதற்கு அடுத்ததாக மலையாளத்தில் தற்போது அவர் நடித்துள்ள வெள்ளரி பட்டணம் என்கிற படம் வரும் மார்ச் 24 அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மகேஷ் வெட்டியார் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஒரு கிராமத்து பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் நடித்தபோதுதான் தனது இரு சக்கர வாகன உரிமத்தை மஞ்சு வாரியர் பெற்ற நிகழ்வு வைரலானது.
அதேசமயம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் பஞ்சாயத்து தலைவர் என்றாலும் பெரும்பாலான காட்சிகளில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தான் நடித்துள்ளார். இது குறித்து மஞ்சு வாரியர் கூறும்போது, “எனக்கு சேலை அணிவது ரொம்பவே பிடிக்கும். சமீபத்தில் நான் சேலை அணிந்து வெளியிட்ட பதிவுக்கு பல லட்சம் லைக்குகள் கிடைத்தன. ஆனால் இந்த படத்தில் நான் ஏற்று நடித்துள்ள சுனந்தா கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது. ஒரு பெண் அரசியல்வாதி என்றால் சேலைதான் அணிய வேண்டுமா என்று கேள்வி கேட்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் இயக்குனர் மகேஷ் வெட்டியாரும் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சமீராவும் வித்தியாசமான ஆடைகளை எனக்காக உருவாக்கி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.