'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லால் சலாம். இதில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
கடந்த மார்ச் 8ம் தேதி படப்பிடிப்பு செஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தில் பிரபல மூத்த காமெடி நடிகரான செந்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு விஷ்ணு விஷாலுடன் காம்பினேஷன் காட்சிகள் இருக்கிறதாம். இப்போது நடைபெறும் முதல்கட்ட படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெறுகிறதாம்.
ரஜினிகாந்த் தற்போது தான் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு லால் சலாம் படத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.




