ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் |

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்நலக்குறைபாடு காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கினார். அந்த சமயத்தில் அவருக்கு நடிகர்கள் பலரும் பண உதவி செய்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது ஒரு தனியார் சேனலுக்கு பொன்னம்பலம் அளித்த பேட்டியில் "தம்பி தனுஷுக்கு நான் போனில் பேசி கொண்டிருக்கும் போதே என் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினார். இந்த அளவிற்கு அவர் உதவி செய்வார் என நான் நினைக்கவில்லை. நான் நினைத்தது விட பத்து மடங்கு அதிகமாக எனக்கு உதவி செய்துள்ளார். கடத்த மூன்று வருடத்தில் நான் கஷ்டபடாத அளவிற்கு தனுஷ் உதவியுள்ளார்" என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.




