பூரண குணமடைந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் | காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சில வருடங்களாக தமிழில் எந்த படமும் நடிக்காமல் இருந்தார். மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினியின் 'ஜெயிலர்' , சுந்தர். சி யின் அரண்மனை 4 படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா நடிகை தமன்னா இருவரும் காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.
இது குறித்து சமீபத்தில் நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் "நடிகர் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளேன். அதற்குள் இதுபோன்ற வதந்திகளை சில நபர்கள் பரப்பி வருகின்றனர். அதனால் இந்த விஷயத்திற்கு விளக்கமளிக்க அவசியமில்லை. சினிமா உலகில் நடிகர்களை விட நடிகைகள் இதுபோன்று காதல் கிசுகிசுக்களில் சிக்குகிறார்கள். எதனால் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார். தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.