புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
நடிகர் சூர்யா இப்பொழுது பிஸியாக அவரது 42-வது படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதை சிவா இயக்குகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விரைவில் வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா . இதனிடையே தமிழ் நடிகர்கள் பலர் தெலுங்கு தயாரிப்பாளர் படங்களில் நடிப்பது டிரெண்ட் ஆகியுள்ளது. விஜய் (வாரிசு), தனுஷ் (வாத்தி), சிவகார்த்திகேயன் (பிரின்ஸ்) இவர்களை தொடர்ந்து இந்த வரிசையில் சூர்யாவும் நேரடி தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் இவர் நடிக்க இருக்கும் இப்படத்தை சீதா ராமம் படத்தின் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கவுள்ளாராம். இந்த படத்தை தெலுங்கு பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள் என கூறப்படுகிறது . இப்படத்தின் கதையை இயக்குனர் முதலில் நடிகர் ராம் சரண் மற்றும் நடிகர் நானிக்கு கூறியுள்ளார். அவர்கள் வேறுபடங்களில் பிஸியாக இருப்பதால் மறுத்துவிட்டனர். இதனால் அந்த கதையை தற்போது சூர்யாவிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.