'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
துணிவு படத்திற்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இந்த படத்தை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய உலக சுற்றுப்பயணத்தை தொடங்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் 62வது படத்தின் கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு, தற்போது மகிழ் திருமேனி இயக்குனராகி இருப்பதால் ஏற்கனவே திட்டமிட்டத்தை விட படப்பிடிப்பு தாமதமாகிவிட்டது. அதோடு கதை மற்றும் நடிகர் - நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாவதிலும் தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தை மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி நான்கே மாதத்தில் முடிக்க திட்டமிட்டு இருந்த அஜித் குமார், அவசர அவசரமாக படப்பிடிப்பு நடத்தினால் திட்டமிட்டபடி ஒரு தரமான படமாக கொடுக்க முடியாது என்பதால் தனது உலக சுற்றுலா பயணத்தை மேலும் சில மாதங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறாராம். குறிப்பாக விஜய்யின் லியோ படம் பிரமாண்டமாக உருவாகி வருவதால் அந்த படத்திற்கு இணையாக தனது 62 வது படத்தையும் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இடத்தில் அதிகப்படியான அவசரம் காட்டாமல் நிதானமாக படப்பிடிப்பு நடத்துங்கள். திட்டமிட்டதை விட கூடுதலாக பல மாதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு நான் உலக சுற்றுப்பயணத்தை வைத்துக்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறாராம்.