ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா அதையடுத்து வணங்கான் படத்தில் கமிட்டாகி முதல் கட்ட படப்பிடிப்பிலும் நடித்து வந்தார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில் அப்படத்தின் கதை தனக்கு பிடிக்காததால் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் சூர்யா. இதையடுத்து பாலா வெளியிட்ட அறிக்கையில், நானும் சூர்யாவும் கலந்து பேசி வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என்று முடிவெடுத்து இருக்கிறோம். இதில் எங்களுக்கு வருத்தம் தான். என்றாலும் சூர்யாவின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது என்று கூறியிருந்தார் பாலா.
இந்த நிலையில் தற்போது வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ம் தேதி மீண்டும் கன்னியாகுமரியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதேப்போல் நாயகி கிர்த்தி ஷெட்டியும் விலகிவிட்டதாகவும் அவருக்கும் பதில் வேறு ஒருவர் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.