நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படப்பிடிப்பு தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா , பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின் என பலர் நடித்து வந்தார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு சென்னை திரும்பி நிலையில், விஜய் மற்றும் திரிஷாவும் ஒரு சிறிய பிரேக்கிற்காக சென்னை திரும்பி இருந்தார்கள். தற்போது இயக்குனர் கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதால் அவரும் சென்னை திரும்பி விட்டார். அடுத்தகட்டமாக லியோ படப்பிடிப்பில் முக்கிய வில்லன்களாக நடிக்கும் சஞ்சய்தத், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்ள போகிறார்கள். இவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் காஷ்மீர் செல்வதை தொடர்ந்து மீண்டும் விஜய்யும் காஷ்மீர் செல்கிறார். அப்போது விஜய்யுடன் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோர் மோதும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.