அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
கடந்த வருடம் மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியான மூன்று படங்கள் 50 கோடி முதல் 100 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில் இந்த வருடம் துவங்கி இரண்டு மாதங்கள் முடிய உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மலையாளத்தில் வெளியான ரொமான்சம் என்கிற படம் தற்போது இந்த வருடத்தின் முதல் படமாக 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. சித்து மாதவன் இயக்கிய இந்தப்படத்தை ஜான் பால் ஜார்ஜ் என்பவர் தயாரித்திருந்தார்.
இந்த படத்தை வெளியிடுவதற்கு முன் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜான் பால் ஜார்ஜ் ரசிகர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பில், தன்னிடம் இருந்த அனைத்தையும் இந்த படத்தில் முதலீடு செய்து விட்டதாகவும், இந்த படம் ரிலீஸ் மற்றும் வியாபாரம் குறித்து தான் போட்ட கணக்குகள் எல்லாம் சற்றே மாறி தற்போது எல்லாம் முடங்கி ஸ்தம்பித்த நிலையில் இருப்பதாகவும் இந்த படத்திற்காக நீங்கள் டிக்கெட் எடுப்பதற்கு முன்பு யோசிக்கும் அந்த தருணம் தான் எனது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்றும் இதைவிட அதிகமாக கெஞ்சுவதற்கு எனது தன்மானம் இடம் தரவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி தற்போது 25 நாட்கள் ஆன நிலையில் கேரளா மற்றும் மற்ற மாநிலங்கள், இது தவிர ஓவர்சீஸ் உரிமை என 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்த வருடத்தில் 50 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த படம் வெறும் ஐந்து கோடியில் தயாரானது என்பதும் ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகிய இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.