‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

உதயநிதி சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் 'கலகத் தலைவன்' மற்றும் 'கண்ணை நம்பாதே' ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார். இதில் 'கலகத் தலைவன்' வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் 'கண்ணை நம்பாதே' படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ், வசுந்தரா காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசைமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆக்ஷன் உடன் கிரைம் கலந்த படமாக உருவாகி உள்ளது. மேலும் இப்படம் வருகின்ற மார்ச் 17ல் வெளியகும் எனவும் டிரெய்லரின் முடிவில் அறிவித்துள்ளனர்.