அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

தமிழ் சினிமாவில் இன்றைய இளம் ரசிகர்களின் அபிமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கவுதம் மேனன். அவர் தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் கவுதம். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. அப்படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார் கவுதம். இரண்டு தினங்களுக்கு முன்பு பிப்ரவரி 25ம் தேதியன்று கவுதம் மேனன் பிறந்தநாளை முன்னிட்டு 'லியோ' படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படத்தைத் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.