அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
நடிகை அமலபால் கார்த்தி நடித்த கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான போலா என்ற படத்தில் அஜய் தேவகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை அஜய் தேவ்கனே தயாரித்து, இயக்கி, நடித்தும் உள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் மெலடி பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் தனது நண்பர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விழுப்புரத்தில் புகார் அளித்திருந்த அமலாபால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அதையடுத்து ஆன்மிக தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய தொடங்கியவர், பழநி முருகன் கோயிலுக்கு சென்றார். பின்னர் இந்தோனேசியாவில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று தியானம், வழிபாட்டில் ஈடுபட்டார். இந்த நிலையில் தற்போது ஒரு அருவியில் தான் ஆனந்தமாக நீராடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார் அமலாபால். அருவி அருகே உள்ள மலையின் மீது ஏறுவது, பின்னர் அங்கிருந்து குதித்து உற்சாகமாக குளியல் போடுவது, அருவி நீரோடையில் நீந்துவது, அருவி அருகே ஊஞ்சல் ஆடுவது... என மகிழ்ச்சியாய் இருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலானது.