ஒரே நாளில் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'டிராகன், நீக்' | 'கேம் சேஞ்ஜர்' பாடல்கள்: நடன இயக்குனர்களை குறை சொன்ன தமன் | குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் |
ரஜினி நடித்த சந்திரமுகி படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க மறுத்ததை தொடர்ந்து, அவர் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்க பி.வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ராதிகா, வடிவேலு, ரவிமரியா, மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரணவத், ஜோதிகா நடித்த சந்திரமுகி கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மகிமா நம்பியார் இணைந்துள்ளார். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் மஹிமா நம்பியார் பகிர்ந்துள்ளார். அதில், "திறமை மிகுந்த அற்புதமான மனிதரான லாரன்ஸ் மாஸ்டருடன் பணிபுரிந்த அனுபவம் அற்புதமானது. இந்த சந்திரமுகி 2 படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று மஹிமா நம்பியார் ட்வீட் செய்துள்ளார்.
'சாட்டை' படத்தில் அறிமுகமான மகிமா நம்பியார், அதன் பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுரகுரு, ஓ மை டாக், ஐங்கரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.