தமிழ் சினிமாவின் 1000 கோடி கனவு…அடுத்த ஆண்டாவது நடக்குமா? | 4வது திருமணத்திற்கு பின் கொச்சியை விட்டு வைக்கம் இடம் பெயர்ந்த நடிகர் பாலா | எம்புரான் செட்டுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா | நவம்பர் 29ல் 9 படங்கள் ரிலீஸ் | கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர்' வில்லன் | பிளாஷ்பேக்: நடிப்பில் சாதித்து, தயாரிப்பு, இயக்கத்தில் சரிவை சந்தித்த 'நடிகையர் திலகம்' சாவித்திரி | இந்த விஷயம் இருந்தால் மட்டும் கதை சொல்லுங்க : மிஸ் யூ இயக்குனரிடம் ஜிப்ரான் போட்ட கண்டிஷன் | நடிகர் தர்ஷனுக்கு ஆபரேஷன் செய்வதில் தாமதம் : ஜாமீனை நீட்டிக்கும் முயற்சியா? | ரஜினி இதையெல்லாம் விட்டுடலாமே : ஜானகி அம்மாவிடம் வருத்தப்பட்ட எம்ஜிஆர் | புஷ்பா 2 சர்ச்சை : வெளிப்படையாகப் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத் |
பாடகர் மனோலார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிப்பில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். பாடகர் மனோ பல வருடங்களுக்கு பிறகு நடித்துள்ளார்.
1992ம் ஆண்டு கமல் நடித்த 'சிங்காரவேலன்' படத்தில் நடிகராக அறிமுகமான மனோ, அதன்பிறகு பொறந்த வீடா புகுந்த வீடா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு நடிக்கவில்லை. தற்போது இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இசையில் பிசியாக இருந்த என்னை கமல் சார் என் மீதுள்ள அன்பின் காரணமாக சிங்காரவேலன் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஊட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நேரம் கிடைக்கும்போது பாடல்களை பாடி வந்தேன். பாடகர், நடிகர் என்று எனது பயணத்தை தொடர நினைத்தபோது இளையராஜா சார் அழைத்து "நடிப்பதாக இருந்தால் அதில் தீவிரம் காட்டு, பாடுவதாக இருந்தால் அதில் தீவிரம் காட்டு. உனக்காக எந்த பாடலும் காத்திருக்காது" என்றார். அவரது கருத்தை அப்படியே ஏற்று பாடுவதில் கவனம் செலுத்தினேன். இடைவெளி கிடைத்தபோது சில படங்களில் நடித்தேன். பிறகு அதையும் நிறுத்தி விட்டேன்.
இப்போது இந்த படத்தின் இயக்குனர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. முதலில் நடிக்க மறுத்து விட்டேன். பிறகு இயக்குனர் தொடர்ந்து வலியுறுத்தினார். அறிமுக இயக்குனர், இளைஞராக இருக்கிறார். அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிக்க முடிவெடுத்தேன். இப்போது திரைப்பட படங்களில் பாடுவதை விட மேடை கச்சேரிகளில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறேன். இந்த படத்தின் மூலம் ரசிகர் என்னை மீண்டும் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு செய்வேன். என்றார்.