'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு 50 லட்சம் ரொக்க பரிசும், பிக்பாஸ் டிராபி மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜே மகேஸ்வரி தனது பிக்பாஸ் வீட்டு நண்பர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார். இதில் ரக்ஷிதா, ஷிவின், விக்ரமன், ஷெரினா, ராம், ஏ.டி.கே, அசல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகேஸ்வரி அதிமாக சண்டை போட்ட அசீம் கலந்து கொள்ளவில்லை. அதே போல தனலட்சுமியும் கலந்து கொள்ளவில்லை. இந்த விருந்து படங்கள் தற்போது இணைய தளத்தில் பரவி வருகிறது. பலரும் அசீமை அழைக்காதது குறித்து மகேஸ்வரியை குறைபட்டுக் கொண்டனர். “விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். தனிப்பட்ட விரோதமாக தொடராதீர்கள்” என்றும் கூறியுள்ளனர்.