7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

வெளிநாடுகளில் புகழ்பெற்று, முதல் முதலாக இங்கே ஹிந்தியில் துவங்கப்பட்டு வரவேற்பை பெற்ற பிக்பாஸ் என்கிற ரியாலிட்டி ஷோ, பின்னர் தமிழில் கமல்ஹாசன், தெலுங்கில் நாகார்ஜுனா, மலையாளத்தில் மோகன்லால் ஆகியோர் தொகுத்து வழங்க மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது மலையாள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்க இருக்கிறது.
இதற்கு முன்னதாக பிக்பாஸ் ஷோவின் நான்கு சீசன்களையும் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். அதேசமயம் கடந்த நான்காவது சீசனில் மோகன்லால் தொகுத்து வழங்குவது பற்றி நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக அவர் போட்டியாளர்களை கண்டிப்பதில் பாரபட்சம் காட்டுகிறார் என்று அதிகம் சொல்லப்பட்டு வந்தது. மேலும் இதற்கு மிக சரியான நபராக ஆக்சன் கிங் என அழைக்கப்படும் சுரேஷ்கோபி தான் பொருத்தமாக இருப்பார் என்றும் பலர் கூறி வந்தனர்.
இதனால் இந்த பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளரில் மாற்றம் இருக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஐந்தாவது சீசனையும் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடுத்த கட்டமாக இந்த புதிய சீசனுக்காக வெளியாக இருக்கும் புரோமோவுக்கான படப்பிடிப்பில் தற்போது மோகன்லால் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த சீசன் எப்போது இருந்து துவங்கும் என்பது குறித்த இந்த புரோமோ விரைவில் வெளியாகும் என தெரிகிறது.