‛‛ஒவ்வொரு மூச்சும் புதிய துவக்கம்'': ஓவியா | சீனாவில் ரூ.56 கோடி வசூலைக் கடந்த மகாராஜா! | மதுரை அழகர்கோயிலில் மனைவியுடன் தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் | அஜித்தின் விடாமுயற்சி படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? | ஹனிமூனுக்காக ஐஸ்லாந்த் நாட்டுக்கு செல்லும் நாகசைதன்யா- சோபிதா! | பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயல் - டீப் பேக் வீடியோ குறித்து பிரக்யா நாக்ரா அதிர்ச்சி | ராஜ்குமார் ராவின் சகோதரர் அமித் ராவ் அறிமுகமாகும் ‛தி டைரி ஆப் மணிப்பூர்' | குருவாயூரில் நடந்த காளிதாஸ் ஜெயராம் - தாரிணி திருமணம்! | மீண்டும் எல்ரெட் குமார் தயாரிப்பில் சூரி! | எப். பி. ஜோர்ன் வாட்ச் மேக்கரை சந்தித்த தனுஷ்! |
பிரின்ஸ் படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மிஷ்கின், சுனில் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் இப்படத்தில் சரிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகும் இந்த மாவீரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதோடு, சிவகார்த்திகேயன் குறித்த ஸ்பெஷல் வீடியோவும் அன்றைய தினம் பிறந்த நாள் ஸ்பெசலாக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மாவீரன் படத்தை பக்ரீத் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் கடைசி வாரத்தில் நான்கு நாட்கள் விடுமுறைகள் தினம் என்பதால் இந்த நாளில் அப்படத்தை வெளியிடுகிறார்கள். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது. மேலும், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகளும் வெளியிடப்பட இருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது .
அதோடு சிவகார்த்திகேயனின் 22வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்த புதிய அப்டேட்டும் விரைவில் வெளியாக இருப்பதாக சிவகார்த்திகேயனுக்கு 38வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.