ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்த புஷ்பா படத்தில் வில்லன் சுனிலின் மனைவியாக நடித்தவர் அனுசுயா பரத்வாஜ். சின்னத்திரையில் இருந்து வந்த இவர் இப்போது தெலுங்கில் பல படங்களில் நடிக்கிறார். பல தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தொடருகிறார். சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் போட்டோ ஒன்றை பகிர்ந்தார். இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வந்தனர். ஒருவர், ‛‛பணத்திற்காக தான் நீங்கள் இவரை திருமணம் செய்தீர்களா...'' என கேட்டார்.
இதனால் கோபமான அனுஷ்யா அந்த நபருக்கு, ‛‛அவரிடம் மட்டும் தான் பணம் உள்ளதா... ஏன் என்னிடம் இல்லையா... இப்படி சொன்னதற்காக உங்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உன் கன்னத்தில் செருப்பால் அடிப்பேன். மஞ்சள் காமாலை வந்தவனுக்கு உலகமே மஞ்சளாகத்தான் தெரியும். பணம் மட்டுமே புத்தியாக கொண்டவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும். தயவு செய்து மாறுங்கள்'' என காட்டமாக எச்சரித்து பதிலடி கொடுத்துள்ளார்.