பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் 'வாத்தி', தெலுங்கில் 'சார்' என தனுஷ் நடிக்கும் படம் நாளை வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தனித்தனியாக படமாக்கப்பட்டுள்ள இந்தப்படம் மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார் தனுஷ்.
படம் வெளியாகும் தினத்தில் அதிகாலை காட்சிகள், காலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவதுதான் தற்போதைய வழக்கம். பொதுவாக ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக 20 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதிக அளவிலான பிரிமீயர் காட்சிகள் இங்கு நடைபெற்றன. தற்போது அமெரிக்காவில் மட்டுமே வெளியீட்டிற்கு முன்பாக அப்படிப்பட்ட காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது 'சார்' படத்திற்காகத் தெலுங்கில் இன்றே பல நகரங்களில் பிரிமீயர் காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். ஐதராபாத், விசாகப்பட்டிணம், விஜயவாடா, நெல்லூரி, ராஜமுந்திரி, காக்கிநாடா ஆகிய ஊர்களில் இன்று இரவு பிரிமீயர் காட்சிகள் நடைபெறுகிறது. ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெறும் நான்கு பிரிமீயர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டது.