இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சியை இன்று(பிப்., 13) துவக்கி வைத்தார். இதற்காக பெங்களூர் வந்த பிரதமரை கன்னட திரை உலகை சேர்ந்த கேஜிஎப் பட நாயகன் யஷ் , காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி, புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி மற்றும் ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிர்கந்தூர் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது பிரதமரிடம் திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர். குறிப்பாக வரி தொடர்பான விஷயங்கள், கர்நாடகாவில் திரைப்பட நகரம், வெளிநாடுகளில் இருப்பது போன்று இங்கும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை செய்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். பிரதமரும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.