லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
வினோத் இயக்கத்தில், அஜித், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் 'துணிவு'. இப்படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் சுமார் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'துணிவு' படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் டிரென்டிங்கில் முதலிரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 'துணிவு' ஹிந்தி, 'துணிவு' தமிழ் இரண்டு படங்களும் நெட்பிளிக்ஸ்ல் இந்த வார டாப் 10 படங்களில் முதலிரண்டு இடங்களில் உள்ளது.
ஓடிடியில் வெளியானாலும் தமிழகத்தில் இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே 28 தியேட்டர்களில் ஓடுகிறது. இன்றைய பல காட்சிகள் ஹவுஸ்புல்லாகவும் ஆகி ஆச்சரியப்படுத்தி உள்ளது.