'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

தமிழ் சினிமா உலகில் இன்று, இளம் இயக்குனர்கள்தான் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் முக்கியமானவராக பிரதீப் ரங்கநாதனும் இருக்கிறார்.
அவரது இயக்கத்தில் 2019ம் ஆண்டில் வெளிவந்த 'கோமாளி' படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. அதற்குப் பிறகு அவர் இயக்கி, நாயகனாகவும் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'லவ் டுடே' படம் நேற்று 100வது நாளைத் தொட்டது.
இன்றைய ஓடிடி யுகத்தில் ஒரு படம் ஒரு தியேட்டரில், காலை காட்சியாகவாவது 100 நாட்களைத் தொடுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இரண்டு படங்களுமே 100 நாட்களைத் தொட்டிருக்கிறது. அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.