ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

சின்னத்திரை நடிகரான கவின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தொடர்ந்து ‛லிப்ட்' படத்தில் நாயகனாக நடித்தார். இப்போது ‛டாடா' என்ற படத்தில் நடித்துள்ளார். அபர்ணா தாஸ் நாயகியாக நடித்துள்ளார். கணேஷ் கே பாபு இயக்கி உள்ளார். நேற்று வெளியான இந்தப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் கவின். இதுபற்றி, 'இன்று கோவிலுக்கு சென்றேன்' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் கவின் தவிர்த்து டாடா படக்குழுவும் கமலை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுதொடர்பான போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள்ளனர்.




