‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே நடந்து வருகிறது. விஜய் உடன் திரிஷா, சஞ்சய் தத், கதவும் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லோகேஷின் பாணியில் அதிரடி கலந்த கேங்ஸ்டர் படமாகவும், போதை பொருள் தொடர்பான படமாகவும் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கிறார்.
விஜய் உடன் முதன்முறையாக நடிப்பது குறித்து அர்ஜூன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛லோகேஷின் கைதி, விக்ரம் படங்களை பார்த்துள்ளேன். வித்தியாசமான படங்களை கொடுக்கும் அவரது படத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் லோகேஷ் என்னை வேறு மாதிரி ஒரு ஸ்டைலில் காட்டப்போகிறார். இதுவரை என்னை பார்க்காத ஒரு கேரக்டரில் பார்க்க போறீங்க'' என தெரிவித்துள்ளார்.