புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
கடந்து சில நாட்களாகவே இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான ஜெய்சல்மர், மீடியாக்களில் அதிகம் இடம் பிடித்து வருகிறது. காரணம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது அங்கே நடைபெற்று வருவது தான். தற்போது அங்கே நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு விட்டாலும் அவரும் தற்போது ஜெய்சல்மரில் முகாமிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல மலையாள நடிகர் பிரித்விராஜ் தனது மனைவி சுப்ரியாவுடன் ஜெய்சல்மருக்கு வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று நடைபெற்ற சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானி திருமணத்திற்காக வந்தார்கள் என்று சொல்லப்பட்டாலும் இவர்கள் மட்டுமல்ல, இன்று நடிகர் கமலும் கூட ஜெய்சல்மாருக்கு வருகை தருகிறார். காரணம் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி கம்பெனியின் இந்திய பிரெசிடெண்ட் ஆன கே மாதவன், தனது மகன் திருமண நிகழ்விற்காக தான் திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் ஏற்கனவே ஜெய் சல்மரில் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், காஷ்மீரில் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் விஜய் ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.