நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்க தயாராகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோக்களாக நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன் பட பூஜை நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் ஆன்மிகத்தில் அதிக பற்று கொண்ட ஐஸ்வர்யா, திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.