விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

விஜய் நடிப்பில் வெளிவந்த 'வாரிசு' படத்தின் இசையமைப்பாளர் தமன், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். தெலுங்கில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கும், த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார்.
இரு தினங்களுக்கு முன்பு மகேஷ்பாபு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தமனுக்கு எதிராக பல பதிவுகளைப் பதிவிட்டு டிரெண்டிங் செய்தனர். மகேஷ்பாபு நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'சர்க்காரு வாரி பாட்டா' படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார். அப்படத்தில் இடம் பெற்ற 'கலாவதி' பாடல் மட்டும்தான் ஹிட்டானது. படத்திற்கான பின்னணி இசையும் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை.
அடுத்து த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கும் தமன் தான் இசை என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே மகேஷ்பாபு ரசிகர்கள் தமன் படத்தில் வேண்டாம் என்று சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் தனக்கு எதிராகப் பதிவு செய்த 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக “நெகட்டிவிட்டி…. ஆழ்ந்த இரங்கல்…. அங்கிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும்,” எனப் பதிவிட்டு, 'கெட் லாஸ்ட்' என்ற ஆடியோவுடன் டுவீட் செய்துள்ளார் தமன்.