விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா |
தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பும் ஆந்திரா வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படமும், கமலின் இந்தியன்-2 படமும் ஒரே நாளில் திரைக்கு வர இருப்பதாக ஒரு தகவல் தற்போது கோலிவுட்டில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இதற்கு முன்பு ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ரஜினி - கமல் நடித்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரப் போகின்றன.