தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்தவர் ஸ்ரேயா. தமிழில் 'மழை' படத்தில் அறிமுகமாக ரஜினியுடன் நடித்த 'சிவாஜி' படம் மூலம் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானவர். அந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார்.
2018ம் ஆண்டில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரேய் கோஸ்சேவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2021ல் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார் ஸ்ரேயா. 2001ம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' என்ற தெலுங்குப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரேயா கடந்த 22 வருடங்களாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவர் நடித்து 'ஆர்ஆர்ஆர், தட்கா, த்ரிஷ்யம் 2' ஆகிய படங்கள் வெளிவந்தன. அடுத்து 'கப்ஜா' என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான, கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவிடுவார் ஸ்ரேயா. 40 வயதைத் தொட்ட பின்னும் அவர் இன்னமும் அதே இளமையுடன் இருக்கிறார் என ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். சமீபத்தில் அவர் பதிவிட்ட சில கவர்ச்சிகரமான புகைப்படங்கள் பலரையும் வியக்க வைத்துள்ளன.