டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். தற்போது பிசாசு- 2 படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் ஏற்கனவே நந்தலாலா, சவரக்கத்தி போன்ற படங்களில் நடித்துள்ள மிஷ்கின், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் மற்றும் விஜய்யின் லியோ போன்ற படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து அவரைத் தேடி வில்லன் வாய்ப்புகள் படை எடுத்துக் கொண்டிருப்பதால் அடுத்தபடியாக முழுநேர நடிகராவதற்கு திட்டமிட்டுள்ளார் மிஷ்கின். அதுமட்டுமின்றி தன்னிடம் கால்சீட் கேட்டு வருபவர்களிடத்தில், ஒரு நாளைக்கு தனக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் தர வேண்டும் என்றும் சொல்லி பலத்த அதிர்ச்சி கொடுத்து வருகிறார் மிஷ்கின்.




