மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா |

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் ஈர்ப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவந்த சன்னி லியோன் சமீப காலமாக சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தமிழில் அவர் கதாநாயகியாக நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இன்று (பிப்-5) மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் அமைந்துள்ள கட்டகஞ்சே பங்க் என்கிற பகுதியில் நடைபெற உள்ள பேஷன் ஷோவில் கலந்து கொள்ள உள்ளார் சன்னி லியோன்.
அதேசமயம் நேற்று காலை இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் அருகில் உள்ள இடத்தில் மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. இது அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் இன்று அந்த பேஷன் ஷோ நடைபெறுமா ? அப்படியே நடைபெற்றாலும் சன்னி லியோன் அதில் கலந்து கொள்வாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.. கதர் மற்றும் கைத்தறி துணிகளை புரமோட் பண்ணும் விதமாக இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.