‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் புளோரா. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை காதலித்தார்.
இந்த நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் புளோரா. அதில் அவர் கூறியிருப்பதாவது: 20 வயதில் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்தேன். ஹிந்தியில் 10 படங்களுக்கு மேல் நடித்தேன், விளம்பரங்களிலும் நடித்தேன். பின்னர் ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் எனது வாழ்க்கை மாறிப்போனது. அவர் என்னை அடித்து துன்புறுத்த தொடங்கினார். எனது அந்தரங்க உறுப்புகளில் அடித்து காயப்படுத்தினார். என் செல்போனை பறித்து கொண்டு நான் சீரியல்களில் நடித்து வந்ததை தடுத்தார்.
14 மாதங்களாக என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். அவரிடமிருந்து தப்பி என் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளேன். தற்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்திச் செல்ல கற்றுக் கொண்டுவிட்டேன். இனி படங்களில் தீவிரமாக நடிப்பேன்.
இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.