வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் |
2010ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி - தமன்னா நடித்து வெளியான படம் பையா. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 13 ஆண்டுகள் கழித்து தற்போது இயக்கப் போகிறார் லிங்குசாமி. ஆனால் முதல் பாகத்தில் நடித்த கார்த்தி - தமன்னாவிற்கு பதிலாக, ஆர்யா மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஜான்வி கபூர், தென்னிந்திய மொழிகளில் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாக பேட்டிகளில் கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது பையா 2 படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல் விரைவில் வெளிவரலாம்.