‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள 'கந்திகோட்டா' என்ற இடத்தில் நடந்து வருகிறது. அங்கு நடக்கும் படப்பிடிப்பிற்கு திருப்பதியில் இருந்து தினமும் ஹெலிகாப்டர் மூலம் கமல்ஹாசன் சென்று வருகிறாராம். ஹெலிகாப்டரில் அவர் ஏறச் செல்லும் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கந்திகோட்டா என்பது திருப்பதியிலிருந்து 227 கி.மீ. தொலைவில் உள்ளது. பென்னாறு நதி பாயும் அழகிய பள்ளத்தாக்கு அங்கு உள்ளது. மேலும் அந்த இடத்தைச் சுற்றி காடுகளும் இருப்பதால் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது. தினமும் காரில் பயணித்து அந்த இடத்திற்கு செல்ல முடியாது என்பதால் கமல்ஹாசன் சென்று வர ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுத்துள்ளார்களாம்.
'இந்தியன் 2' படம் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தற்போது படப்பிடிப்பு இடைவிடாமல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் படப்பிடிப்பு முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.