மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் த்ரிஷாவிற்கு மீண்டும் ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கி தந்துள்ளது. அந்தவகையில் நடிகர் விஜய் உடன் 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார் த்ரிஷா.
‛மாஸ்டர்' படத்திற்கு பின் விஜய்யும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் 67 என தற்காலிகமாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். நேற்று முதல் அது தொடர்பான அப்டேட் வெளியானது. நேற்றைய அறிவிப்பில், “சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, மிஷ்கின், மன்சூரலிகான், மாத்யு தாமஸ், கவுதம் மேனன், அர்ஜுன்” ஆகியோர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இன்று த்ரிஷா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யும், திரிஷாவும் இதற்கு முன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என நான்கு படங்களில் நடித்துள்ளனர். இப்போது 5வது முறையாக இவர்கள் இணைகின்றனர். அதுவும் 14 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்கின்றனர். தற்போது விஜய் 67 படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இதற்காக விஜய், திரிஷா, பிரியாமணி, லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் அங்கு சென்றனர்.