மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
யசோதா படத்தின் வெற்றியை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் விரைவில் வெளியாகி இருக்கிறது. அதேசமயம் கடந்த சில மாதங்களாகவே மையோசிடிஸ் என்கிற தசைநார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வரும் சமந்தா படப்பிடிப்புகளுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தான் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார் சமந்தா. இதை தொடர்ந்து அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது.
அது உண்மைதான் என்று சொல்லும் விதமாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்து வந்த குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் தற்போது கலந்து கொண்டு நடித்து வருகிறார் சமந்தா. இந்த தகவலை படத்தின் இயக்குனர் சிவா நிர்வனா உறுதிப்படுத்தியுள்ளதுடன் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட படக்குழுவினர் சமந்தாவை மகிழ்ச்சியுடன் வரவேற்று கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. இன்னொரு பக்கம் சமந்தா பாலிவுட்டில் நடித்துள்ள சிட்டாடல் என்கிற வெப் சீரிஸ் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.