ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் செல்ல மகளாக, சகோதரியாக மாறியிருக்கிறார் ஷிவின் கணேசன். மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ஷிவினுக்கு வெளியுலகில் பேராதரவு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனைவருக்கும் எப்படியாவது நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துவிடும். அந்த வரிசையில், ஷிவினுக்கும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியின் ஹிட் சீரியலான 'பாரதி கண்ணம்மா' தொடர் க்ளைமாக்ஸை எட்டியுள்ள நிலையில், அதை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் ஷிவின் கணேசன் என்ட்ரி இருக்குமென்று கூறப்படுகிறது. பாரதி கண்ணம்மா தொடரில் தான் நடிக்கவிருப்பதை ஷிவினே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். இதனால் ஷிவினின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.