அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
விஜய்சேதுபதி, ருக்மணிவசந்த், திவ்யாபிள்ளை, பப்லு உட்பட பலர் நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகும் படம் ஏஸ். இந்த படம் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. மலேசியாவில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. விஜய்சேதுபதி நடித்த 50வது படமான மகாராஜா பெரிய வெற்றி அடைந்து, 100 கோடியை வசூலித்தது. தொடர்ச்சியான தோல்விகளை கொடுத்து வந்த விஜய்சேதுபதிக்கு மகாராஜா பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.
அடுத்ததாக, 51வது படமாக ஏஸ் வருகிறது. அதனால் இந்த படத்தை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்கிய ஆறுமுககுமார், ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இயக்கியவர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த லாபம் படத்தை தயாரித்தனர். அந்தவகையில் 3வது முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்து இருக்கிறார். இதில் யோகிபாபுவும் இருக்கிறார்.
ஹீரோயின் ருக்மணி வசந்த் கன்னடத்தில் முன்னணி ஹீரோயின். இந்த படம் மூலம் தமிழுக்கு வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி படத்திலும் ருக்மணிதான் ஹீரோயின்.